Saturday, July 10, 2010

வீதியெங்கும் விழாக்கோலம்



நகரப்பேருந்தில் நிலவின் பயணம்.
பேரின்பத்தில் திளைக்கிறது
அவளை தாங்கி வந்த பேருந்து.
என்னில் வரமாட்டளோ?
ஏனைய பேருந்துகளோ ஏக்கத்தில்,
அவள் கால் பதித்த உணர்வறிந்து-மீண்டும் 
சுழலத்தொடங்குது பூமி, 
அவள் தேகத்தை நனைக்க 
மேகங்களின் அவசரக்கூட்டம், 
சாலையோரப்பூக்கடைகளிலோ 
ரோஜாக்களின் சீழ்க்கையொலி,
தைரியமாய் அவளை பார்த்து கண்ணடிக்கிறது 
நகராட்சி மின்விளக்கு,
கடந்து போகிற வழியில் 
அவள் நுழைந்த அந்த புத்தகசாலை,
அவளை பார்த்த ஆர்பரிப்பில்
அணிவகுத்து நின்ற புத்தகங்கள்,
அதில் அவள் குறிப்பாய் தேர்ந்தெடுத்த 
அந்த காதல் கவிதை புத்தகம்,
அதில் முதல் பக்கக்கவிதைக்கான 
அவளுடைய புன்சிரிப்பு,
அவள் செலுத்திய பணத்திற்கு 
ஜொள்ளோடு சேர்த்து அதிக சில்லறை தந்த 
அந்த கடை முதலாளி-அதை 
திருப்பித்தந்த அவளது நற்குணம்,
அவள் வரவை எதிர்பார்த்து
சில இளைஞர்களின் தெருமுனைப்பிரச்சாரம்,
அவள் முத்ததிற்காக 
உண்ணாமல் காத்திருந்த 
பக்கத்து வீட்டுக்குழந்தை 
நிலவோ நடந்து வந்த களைப்பில்
அவள் செல்ல நாய்க்குட்டியோ 
அவளை பார்த்த களிப்பில்,
இவ்வாறாக 
வீதியிலிருந்து வீடுவரை 
விழாக்கோலம் பூண்டிருக்க 
இவ்வளவு நெருக்கமாய் பின்தொடர்ந்தவனை 
இன்றும் இவள் பார்க்கவில்லை என்ற 
ஏக்கத்திலும்
நாளையாவது 
அவளது பார்வையோ அல்லது 
அதன் நிழல்களோ 
என் மீது படக்கூடும் 
எனும் நம்பிக்கையில் 
வழி மாறிய  பயணத்தில் நான்...............!!