Saturday, November 23, 2013

இயலாமை

இனி உன்னை பார்க்கவே கூடாதென்கிற
வைராக்கியமெல்லாம் நீ
வருவதற்கான  அறிகுறியிலேயே தோற்றுவிடுகிறது

Sunday, August 25, 2013


நாள் முழுவதும் 
உனக்கு விடாமல் விக்கல்  எடுக்கிறது 
என்பதற்காகவெல்லாம்-உனை
நினைப்பதை நிறுத்திக்கொள்ள முடியாது 
                                               ம.கோபி 

Sunday, June 23, 2013

பொய் !!!!


நீ  தேவதை போல்  இருப்பதாக 
உன் அம்மா சொல்வதெல்லாம்  பொய் 
உண்மையில் உன்னைப்போல்தான் 
தேவதைகள் இருக்கிறார்கள் ......

Sunday, May 19, 2013

பாவி......

என்னை 
அணு அணுவாய் கொல்வதற்கே 
உன்னை 
அழககாய் பெற்றிருக்கிறாள் 
உன் அம்மா .........

Wednesday, May 15, 2013


தோண்டாமல் தோன்றிய 
உன் கன்னக்குழியில்தான் 
தடுக்காமல் தினம் நான் 
விழுந்துகொண்டிருக்கிறேன் ......

Sunday, May 5, 2013

நினைப்பதற்கு நீயிருக்கும்பொழுது
நான் ஏன் கவிதைகளிளெல்லாம்
கவனத்தை திசை திருப்பிக்கொள்ளவேண்டும் ?



Wednesday, May 1, 2013

இரவெல்லாம் உன்னையே 
நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் 
வரமேனும் சாபத்தை தந்துவிட்டு 
உனக்கென்னவென்று 
என் உறக்கத்தையும் 
சேர்த்து உறங்கிக்கொண்டிருகிறாய் 

எந்திரன்


ஆறு நாட்களாய்.....
தொலைந்திருந்த என்னை 
இன்று கண்டுபிடித்தேன் 

பற்றாக்குறை  உறக்கம் 
துரத்திய விடியல் ...

துரிதப்  புறப்பாடுகள் -பேருந்தில் 
தொங்கியே தொடர்ந்த பயணம் 

தாமதமாய்  அடைந்த  அலுவலகம் 
வசை பூசையாற்றிய அதிகாரி 

தடுமாறித்  தெளிந்த அலுவல் பணி 

இயெந்திர வேகத்தில் 
இரைப்பையில் கிடத்திய சோறு 

பணப்பசியில் கூடுதல் பணி 

கிட்டத்தட்ட இறந்தவனுக்கு 
கிடைத்தது பேருந்தின் 
சாளர இருக்கை 

பயண நேரத்தில் 
நிகழ்ந்ததொரு 
மரண ஒத்திகை ..

ஒரு வழியாய் 
உடைந்து முடிந்து 
வீடு வந்து சேர்ந்தவுடன் 
அடுத்த நாள் வேலைக்கான 
ஆயத்தங்கள் 

அவ்வாறே தொடர்ந்த 
ஆறுநாள் பயணத்தில் 
விடிந்தது இன்று ஒரு ஞாயிறு ....

தொல்லைகளை விட்டு 
சற்று தொலைவில்..

மெதுவாய் விழித்த வானம் ..

நதிக்குளியல் 

புறாக்களுக்கு  இரையிடும் வாய்ப்பு 

எழுத நினைத்திருந்த ஒரு கவிதை 

வர்ணம் தீட்டாமல் விட்ட ஓவியம் 

படிக்காமல் போன 
வைரமுத்து கவிதை புத்தகம் 

அம்மாவின் அசைவ விருந்து 

வீட்டு ஒழுங்கமைவு ...

நாணம் தவிர்த்து 
நண்பனுடன் அரட்டை 

மாலை உலாவல் ...

நூலகப்பரிகாரம் ..

மொட்டை மாடியில் 
அம்மாவின் நிலாச்சோறு 

கொஞ்சம் மனிதனாய் 
வாழ்ந்த நாளின் இறுதியில் 

ஒரு கடினமான நினைவு 

நாளை முதல் ஆறு நாட்களுக்கு-மீண்டும் 
நானொரு எந்திர அவதாரம் ........




Saturday, April 6, 2013


எத்தனை  முறைதான் 
கற்பனை செய்து எழுதுவது ........?
அனுபவித்து ஒரு முறையேனும் 
எழுதவேண்டும் ......
அனைவரும் சொல்லும் 
கவிதையெனும் ஒன்றை...
அதற்காகவேனும் 
காதலித்து தொலையேன் ...... 

                                          ம .கோபி 

நிச்சயப்பரிசு


போட்டியில் நீ வென்றால்.....
நான் முத்தம் தர வேண்டுமென்கிறாய் 
நான் வென்றால் ....
நீ முத்தம் தருவேன் என்கிறாய் ...
முத்தம் நிச்சயமேனும்போது 
போட்டியில் 
வென்றாலென்ன? தோற்றாலேன்ன ?
சரி சரி வா 
பேசுவதை விட்டு விட்டு 
விளையாட்டை தொடங்குவோம் .....

Thursday, February 28, 2013


நட்சத்திர கூட்டலில் 
நான் தினமும்  தோற்றே போகிறேன் 
நீயும் கொஞ்சம் வாயேன் ....
அந்த வானத்தை தோற்கடிப்போம்.......