Wednesday, July 21, 2010

கிறுக்கல்களின் தொகுப்பு -1

ரகசியமாம்....!!!

அவள் கூந்தலில் இருந்து 
வாடி விழுந்த பூக்களைக் கேட்டேன்
அவள் கூந்தல் வாசம் பற்றி,
அதற்கு அவைகள் கூறுகின்றன......!
உயிர் போனாலும்
என் காதலியின் ரகசியத்தை
கூறமாட்டேன் என்று,
நான் அவள் காதலன் என்பதை அறியாமல்!!


காவிரிப்பிரச்சனை 

தமிழக அரசே 
காவிரிக்குடிநீர் விவசாயதிற்கல்ல
அவள் வீட்டுக்குளியலறைக்கு என்று சொல்லுங்கள்
விடிவதற்குள் பிரச்சனை தீர்ந்துவிடும்.

சுனாமி எச்சரிக்கை 

கடலோரம் அவள் குளிக்கச்செல்கிறாள் 
கரையோர மக்களுக்கு உடனே 
யாராவது சுனாமி எச்சரிக்கை விடுங்கள்!!!

முக்கியசெய்திகள்

உன்னைக் குனிந்து பார்ப்பதால் 
கழுத்து வலிக்கிறதாம்....
உயரத்தை குறைக்கசொல்லி
ஊராட்சி நிர்வாகத்திடம் 
உள்ளூர் மின்கம்பங்களெல்லாம் மனு கொடுத்துள்ளதாம் 
நேற்றைய செய்தித்தாளில் படித்தேன்....

நல்ல வேளை

நல்ல வேளை 
அவள் பிறந்து இருபது வருடங்கள்தான் ஆகிறது 
இதுவே எழுபது வருடங்களுக்கு முன்பவள் பிறந்திருந்தால் 
இரண்டாம் உலகப்போரின் தேவையே இருந்திருக்காது
அதுவும் இந்தியாவில் பிறந்திருந்தால் 
இன்று வரை விடுதலையே கிடைத்திருக்காது .

Monday, July 12, 2010

கவிதைத்தூறல்கள்

விளம்பரம் 


அவள் கூந்தலுக்கு விளம்பரம் தேவைப்பட்டது 
எனவே தான் பூக்கள் படைக்கப்பட்டன.


செயற்கை நிலா 


மஞ்சள் வானத்தில் ஒரு செயற்கை நிலா 
அவள் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு


கால் முளைத்த கவிதை 


கவிதைக்கு கால் முளைத்து 
பர்த்திருக்கீர்களா? - இல்லையென்றால் 
அதோ அவ்வழியே தான் 
அவள் நடந்து செல்கிறாள் 
பார்த்து கொள்ளுங்கள்.


பௌர்ணமி 


அவளை பார்த்துவிட்டுத்தான் உறங்கச்செல்வேன் 
என அடம் பிடிக்கிறது நிலா!!
எனவே தான் நேற்று பௌர்ணமியோ!!!!


வெட்கமில்லாதவள்


நான் அவளை எங்கு தொட்டாலும் 
என்னை அவள் திட்டுவதே இல்லை,
இப்படிக்கு மழைத்துளி.


அழகின் அவஸ்தை 


அழகை பிறந்தாலே தொல்லைதனோ?
ஆயிரம் மீனுக்கிடையில் சிக்கிக்கொண்ட ஒரு  நிலா.


தடை உத்தரவு 


உன்னால் சாலை விபத்துகள் அதிகரிக்கிறதாம் 
அரசாங்கமே ,
நீ வெளிவரத் தடை விதித்துள்ளது. 

Saturday, July 10, 2010

வீதியெங்கும் விழாக்கோலம்



நகரப்பேருந்தில் நிலவின் பயணம்.
பேரின்பத்தில் திளைக்கிறது
அவளை தாங்கி வந்த பேருந்து.
என்னில் வரமாட்டளோ?
ஏனைய பேருந்துகளோ ஏக்கத்தில்,
அவள் கால் பதித்த உணர்வறிந்து-மீண்டும் 
சுழலத்தொடங்குது பூமி, 
அவள் தேகத்தை நனைக்க 
மேகங்களின் அவசரக்கூட்டம், 
சாலையோரப்பூக்கடைகளிலோ 
ரோஜாக்களின் சீழ்க்கையொலி,
தைரியமாய் அவளை பார்த்து கண்ணடிக்கிறது 
நகராட்சி மின்விளக்கு,
கடந்து போகிற வழியில் 
அவள் நுழைந்த அந்த புத்தகசாலை,
அவளை பார்த்த ஆர்பரிப்பில்
அணிவகுத்து நின்ற புத்தகங்கள்,
அதில் அவள் குறிப்பாய் தேர்ந்தெடுத்த 
அந்த காதல் கவிதை புத்தகம்,
அதில் முதல் பக்கக்கவிதைக்கான 
அவளுடைய புன்சிரிப்பு,
அவள் செலுத்திய பணத்திற்கு 
ஜொள்ளோடு சேர்த்து அதிக சில்லறை தந்த 
அந்த கடை முதலாளி-அதை 
திருப்பித்தந்த அவளது நற்குணம்,
அவள் வரவை எதிர்பார்த்து
சில இளைஞர்களின் தெருமுனைப்பிரச்சாரம்,
அவள் முத்ததிற்காக 
உண்ணாமல் காத்திருந்த 
பக்கத்து வீட்டுக்குழந்தை 
நிலவோ நடந்து வந்த களைப்பில்
அவள் செல்ல நாய்க்குட்டியோ 
அவளை பார்த்த களிப்பில்,
இவ்வாறாக 
வீதியிலிருந்து வீடுவரை 
விழாக்கோலம் பூண்டிருக்க 
இவ்வளவு நெருக்கமாய் பின்தொடர்ந்தவனை 
இன்றும் இவள் பார்க்கவில்லை என்ற 
ஏக்கத்திலும்
நாளையாவது 
அவளது பார்வையோ அல்லது 
அதன் நிழல்களோ 
என் மீது படக்கூடும் 
எனும் நம்பிக்கையில் 
வழி மாறிய  பயணத்தில் நான்...............!!


Thursday, July 8, 2010

முதல் கவித்துளி



டமில் நாடு 


தமிழாசிரியர்கள் வேலைக்குத் தேவை 
ஆங்கிலப் புலமையுடன் 

விபத்து 

எதிர்பாராமல் நடந்த விபத்து 
பின்பு வழக்கமானது 
     "காதல்" 

இடிமுழக்கம்


அவள் தேகம் தொட்ட வெற்றியை 
கைத்தட்டி கொண்டாடுகின்றன மேகங்கள்


குழந்தைத் தொழிலாளர்கள் 

குழந்தைகளை பணிக்கமர்த்தாதீர்
என்ற போஸ்டரை ஓட்டும் சிறுவன் 




ஆயுள்ரேகை 


இயற்கை ஜோசியம் பார்க்கிறது
தனது ஆயுளை 


என் இனிய நண்பர்களே!!
நான் இந்த பதிவுலகிற்கு புதியவன். 
எனது கவிதைகள் சிலவற்றை இங்கே சமர்ப்பித்துள்ளேன்.
மறக்காமல் பின்னோட்டம் இடவும்.  
உங்களது பின்னோட்டம் எனது வளர்ச்சிக்கு உதவும்.


இப்படிக்கு 
ம.கோபி