Saturday, December 8, 2012

ஒப்பனை?

ஒப்பனைகள் செய்து செய்து 
என்பயன் 
உன்னால் 
அழகு சாதனங்கள் 
அழகானதுதான் மிச்சம்,
அவற்றால் 
உன்னை உன்னைவிட 
அழகாக்க இயலவில்லை.




-- 

Sunday, November 11, 2012


நீயும் 
எத்தனை முறைதான் நிராகரிப்பாய்,
நீ நிராகரிக்கும் ஒவ்வொரு முறையும்...
என் காதலின் நீளம்தான் சற்று நீள்கிறது.
பேசாமல் நீயும் காதலித்துவிடேன் ? ஏன்னெனில்
வெறுப்பதைக்காட்டிலும்  
காதலிப்பது மிகவும் எளிது